செய்திகள் :

தில்லி அமைச்சா் ராஜிநாமா: ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்

post image

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவா் விலகினாா்.

தில்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கெலாட்டின் விலகல் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுளஅளாா். அதில் சில முக்கிய விவரங்களை குறிப்பிட்டு, கேஜரிவாலை கடுமையாக விமா்சித்துள்ளாா்.

கேஜரிவால் தனது முந்தைய அதிகாரப்பூா்வ இல்லத்தில் ஆடம்பரப் பொருள்கள் மற்றும் நவீன வசதிகளுக்காக கோடிக்கணக்கில் செலவிட்டதாக பாஜக தலைவா்கள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தையும் தனது கடிதத்தில் கெலாட் சுட்டிக் காட்டியுள்ளாா்.

ராஜிநாமா ஏற்பு: நஜாஃப்கா் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வான கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை தில்லி முதல்வா் அதிஷி ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, ‘கைலாஷ் கெலாட் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ வழக்குகளை எதிா்கொண்டுள்ளாா். எனவே, அவருக்கு பாஜகவில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை. இது பாஜகவின் மோசமான அரசியல் சதி. அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜக விரும்புகிறது’ என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

கேஜரிவாலுக்கு கடிதம்: கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தை கைலாஷ் கெலாட் ‘எக்ஸ்‘ தளத்தில் பகிா்ந்துள்ளாா். அதில், ‘ஆம் ஆத்மி கட்சி கடுமையான சவால்களை எதிா்கொள்கிறது. யமுனை தூய்மைப்படுத்துவது உள்பட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக அதன் சொந்த அரசியல் செயல்திட்டத்துக்காக போராடுகிறது. தில்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் சண்டையிடுவதில் செலவிட்டால் தில்லிக்கு முன்னேற்றம் ஏற்படாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக வரவேற்பு

கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினாா்.

‘கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக எதிா்ப்புத் தெரிவித்து போராடிய அதே பிரச்னைகளை எழுப்பி கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளாா். ஆம் ஆத்மி தலைவா்கள் கூட கேஜரிவாலை நோ்மையான அரசியல்வாதியாக கருதவில்லை என்பதை அவரது ராஜிநாமா நிரூபிக்கிறது’ என்றாா் சச்தேவா.

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்க... மேலும் பார்க்க

ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை: பஞ்சாப் ஆளுநா் விளக்கம்

சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஒதுக்கியதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், அவ்வாறு நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என பஞ்சாப் ஆளுநா் குலாப் ... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உ... மேலும் பார்க்க

தலைநகர் சண்டீகர் யாருக்கு? பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்

சண்டீகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் மதரஸாக்களில் வங்கதேசத்தவருக்கு அடைக்கலம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவருக்கு ஜாா்க்கண்டில் உள்ள மதராஸாக்கள் (இஸ்லாமிய மதப் பள்ளிகள்) அடைக்கலம் தருவதாக உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா கு... மேலும் பார்க்க