செய்திகள் :

தில்லி தேர்தல்: மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாக்கு கேட்பது நியாயமா? பாஜகவுக்கு ஆம் ஆத்மி கேள்வி

post image

புது தில்லி: பாஜக தில்லிக்கு எதுவும் செய்யாமல் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தலின்போது மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.

புது தில்லியில் இன்று(ஜன. 5) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: “தில்லி மாநகருக்கு எதுவுமே செய்யாத நிலையில், பாஜக எந்த தைரியத்தில் தில்லி மக்களிடம் வாக்கு கேட்கிறது?

தில்லி நிலம் சீர்த்திருத்தச் சட்டப் பிரிவுகள் 81, 33 முடக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இதனை மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் அரசும், இப்போது ஆம் ஆத்மி அரசும் மத்திய அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

தில்லியில் அடுத்தமுறை வாக்கு சேகரிக்க வரும்போது, தாம் ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கருத்திற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூ தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என ஆம் ஆதிமி அறிவித்துள்ளது.

அஸ்ஸாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17ல் தொடக்கம்!

அஸ்ஸாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17 முதல் மார்ச் 25 வரை நடைபெறும் என அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு கோக்ரஜாரில் நடைபெற உள்ள... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தன்னுடைய மனைவியைக் கொன்ற, உடலை வெட்டித் துண்டுகளாக்கி, வீட்டில் இருந்த குக்கரில் அவற்றை வேகவைத்து, எலும்புகளை கிரைண்டரில் அரைத்து ஏரியில் வீசிய சம்... மேலும் பார்க்க

கபில் சர்மா, பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர்கள் கபில் சர்மா, ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, 4 பாலிவுட் பிரபலங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளித்த... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லைக்கு அருகே 2 ட்ரோன்கள் மீட்பு

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்களை) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.வரும் 26-ஆம் தேதி குடியரச... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ரயில் விபத்து: பலி 13-ஆக உயர்வு!

மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இரு... மேலும் பார்க்க

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியக் குடிமக்களுக்கு வழங்... மேலும் பார்க்க