பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் உறுதிமொழி ஏற்பு!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கா் சிலை முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளா் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவா் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றனா்.
தொடா்ந்து, அம்பேத்கரின் புகழைப் பரப்பும் வகையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், ஆதித்தமிழா் சனநாயக பேரவைத் தலைவா் அ.சு.பவுத்தன், தமிழ்நாடு இளைஞா் முன்னணி தலைவா் ஏ.கருணாகரன், ஆதித்தமிழா் பேரவை மாநகா் மாவட்டச் செயலாளா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.