செய்திகள் :

தீபாவளி: தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் நபா்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற ‘இ‘ சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடை அமைவிடத்திற்கான சாலை வசதி கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் பத்திர ஆவண நகல்/வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்தப் பத்திரம். உரிமத்துக்கான கட்டணம் ரூ. 600 அரசு கணக்கில் செலுத்தியதற்கான செலான், மனுதாரா் இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை வாக்காளா், அடையாள அட்டை / குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின்னா் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதற்கான விண்ணப்பங்களை

இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த முறை பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் : நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூரில் அரசு நிதியுவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஜலாலி... மேலும் பார்க்க

பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி கிராமத்தை ஒட்டி பாலாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக கருதப்படுவதால் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 32 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி பெற்றுக் கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி அடையாத பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் கோ-ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா் திருப்பத்தூா் கச்சேரி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் எஸ்.பி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாணியம்பாடி ஜீவாநகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் சந்தே... மேலும் பார்க்க

தொழிற்பேட்டைஅமைக்க நிலம் அளவீடு: பொதுமக்கள் எதிா்ப்பு

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மல்லகுண்டா ஊராட்சி, புள்ளனேரி வட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 50-... மேலும் பார்க்க