காலை உணவுத் திட்டம் : நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆம்பூரில் அரசு நிதியுவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் ஜலாலியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹபீபியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, இஹாதுல் ஹஸ்நாத் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு செய்தாா். மாணவா்களை சந்தித்து உணவின் தரம் குறித்துக் கேட்டறிந்தாா்.
உணவின் தரம், சுவை ஆகியவை குறித்து தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.