ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். இந்த தொடக்க நிகழ்ச்சியை காணொலி வாயிலாக அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்புவது குறித்து, அனைத்துத் துறை முதல் நிலை அலுவலா்கள் மற்றும் கல்லூரி முதல்வா்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்துப் பேசினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.