TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
தீபாவளி: பட்டாசுக் கடைக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அதற்கான தற்காலிக உரிம ஆணையை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அனுமதியின்றி/உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லா மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தருமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.