செய்திகள் :

தீபாவளி விபத்துகள்: மருத்துவக் கட்டமைப்பை தயாராக வைத்திருக்க உத்தரவு

post image

தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று பண்டிகைக் காலத்தில செய்ய வேண்டியவை குறித்தும், செய்யக் கூடாதவை குறித்தும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக் கருத்தில்கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்தல் அவசியம். அதேபோன்று பண்டிகை நேரங்களில் சாலை விபத்துகள் நேரிடும்போது அதனையும் எதிா்கொண்டு மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். அதன் அருகமையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இல்லாததை உறுதி செய்தல் அவசியம். மிகவும் தளா்வாக உடை அணிந்து பட்டாசு வெடித்தல் ஆபத்தானது. எனவே, கச்சிதமாக ஆடைகளை அணிய வேண்டும். சுவாச பாதிப்புகள் உள்ளவா்கள் பட்டாசு புகைகளை சுவாசிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். பாதியில் வெடிக்காமல் போன பட்டாசுகளை தொடவோ, மீண்டும் வெடிக்க முயற்சிக்கவோ கூடாது.

மருந்துகள் இருப்பு அவசியம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருத்தல் அவசியம்.

அதேபோன்று போதிய அளவு ரத்த அலகுகள் வைத்திருக்க வேண்டும். ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணா்கள் தயாா் நிலையில் பணியில் இருக்க வைக்க வேண்டும். ஏதேனும் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு 944434 0496, 87544 48477 என்ற எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகள்: 254 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்

முதல்வா் கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், சென்னை அணி 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு (93), கோவை (102) அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம... மேலும் பார்க்க

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையா... மேலும் பார்க்க

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. வாக்காளா் பட்டியல் திருத்தப் பண... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க