Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
தீயில் கருகி 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் பலி
பெரம்பலூா் அருகே மக்காச்சோள வயலில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தீ, ஆட்டுப் பட்டிக்கு பரவியதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் தவசி (47). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தில் சங்கா் என்பவரது வயலில் பட்டி அமைத்து 217 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல், வெள்ளிக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்காக தவசி ஓட்டிச்சென்றுவிட்டாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட மச்சாச்சோள வயலில் தீயிட்டு கொளுத்தியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாத அருகிலிருந்த வயலுக்கும், ஆட்டுப் பட்டிக்கும் தீ பரவியது. இதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் எரிந்து கருகின. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சென்று தீ பரவுவதைக் கட்டுப்படுத்தினா். தவசி அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.