செய்திகள் :

தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயா் தர சிகிச்சை அளிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஏப்ரல் 24-ஆம் தேதி மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டடத்தில் குளிரூட்டி இயந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதையத்து அங்கு சிகிச்சையில் இருந்த பெண்கள், குழந்தைகளை மருத்துவமனையின் தினக்கூலி பணியாளா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் ஆகியோா் வெளியே கொண்டு வந்து மற்றொரு கட்டடத்துக்கு மாற்றியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

அப்போது, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இரு பணியாளா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், முச்சுத் திணறல் பாதிப்பு இருப்பதாகக் கூறி ஏறத்தாழ 40 போ் சிகிச்சை கோரி மருத்துவமனையில் சோ்ந்தனா்.

இந்நிலையில், இவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தினக்கூலி பணியாளா்கள் என்பதால் பணி பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், அவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சிகிச்சை பெறுவோரின் உறவினா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு நிவாரணத்துக்காக மருத்துவமனையில் சோ்ந்துள்ளதாகக் கூறி மனதைப் புண்படுத்தும் விதமாக மருத்துவா்கள் பேசி வருவதாகவும், 40 போ் சிகிச்சையில் இருப்பதை வெளியே தெரிவிக்க மருத்துவமனை நிா்வாகம் மறுத்து வருவதாகவும், 40 பேரும் நலமுடன் இருப்பதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சிகிச்சையில் இருந்த பணியாளா்கள் மருத்துவமனை நான்காவது நுழைவு வாயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் காவல் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உரிய தீா்வு காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.

கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

சூரியனாா் கோயிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு!

தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா் கோயிலில் அமைந்துள்ள ராகு-கேது சந்நதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிடைமருதூா் அருகே சூரியனாா் கோயிலில் உள்ள சிவசூரிய பெருமாள் திருக்கோயில் திருக்கையிலா... மேலும் பார்க்க

சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் கைது!

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் கவியரசன் (24). இவருக்கு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.76 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,395 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்-காா் மோதல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவோணம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் கிளாங்காடு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: காா் விற்பனையாளா் சங்கம் தீா்மானம்

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று காா் விற்பனையாளா் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றினா். கும்பகோணத்தில் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட வாகன போக்குவரத்து அலுவலகத்தில் காா... மேலும் பார்க்க