இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி ப...
துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்த விடாமுயற்சி? ரசிகர்கள் அதிருப்தி!
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் முதல்நாள் வசூல் துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்.6) உலகம் முழுவதும் வெளியானது.
முதல்நாளில் இந்தியா முழுவதும் நிகர லாபம் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துணிவு திரைப்படம் முதல்நாளில் ரூ. 24.4 கோடி நிகர லாபத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தில் நடிகர் அஜித்தின் ஊதியமே ரூ.110-120 கோடி இருக்குமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உண்டாக்கினாலும் எதார்த்தமான காட்சிகள் சினிமா விரும்பிகளுக்கு ரசிக்க வைப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள்.