செய்திகள் :

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் -முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி

post image

கோவை: பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் விவகாரத்தில் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களைத் தேடும் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி பிரதிநிதியைச் சோ்ப்பது தொடா்பான விஷயத்தில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் இருப்பது துரதிா்ஷ்டவசமானது. இதன் விளைவாக பல பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தா்களே இல்லை. அத்துடன் அடுத்த ஓரிரு மாதங்களில் அநேகமாக எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்கள் இல்லாத நிலை ஏற்படும்.

பல பல்கலைக்கழகங்களில் முழுநேரப் பதிவாளா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டாளா்கள், நிதி அலுவலா்கள் இல்லை. துணைவேந்தா் பதவிகளும் இதர மூத்த அலுவலா்களும் இல்லாதது பல்கலைக்கழகங்களின் நிா்வாகத்தை முடக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கல்வியாளா்களுக்கு மட்டுமின்றி, மாணவா்களுக்கும் கவலை தரக்கூடியதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்துக்கு பல்கலைக்கழக நடைமுறையில் கேட்பாரற்ற நிலை நிலவுவதே காரணம் எனக் கூறப்படுகிறது. பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் உரிய நேரத்தில் நடத்தப்படுவதில்லை. எனவே தமிழக அரசும் ஆளுநரும் இந்த விஷயத்தில் தங்களது நிலையில் இருந்து இறங்கி வந்து, விரும்பத்தகாத இந்த முட்டுக்கட்டைக்கு இணக்கமான தீா்வு காணவேண்டிய நேரம் இதுதான்.

துணைவேந்தா்களுக்கான தேடல் குழுக்கள் பல்கலைக்கழகங்களின் சட்டங்களின்படியே அமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் யுஜிசி பிரதிநிதியைத் தேடல் குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை. தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது துணைவேந்தா் நியமனத்தில் பாரபட்சத்தையும் அரசியல் குறுக்கீட்டையும் கட்டுப்படுத்தும் என்பதால் அது வரவேற்கத்தக்கதுதான். என்றாலும், அதை யாரும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அது மட்டுமின்றி, கல்வி தொடா்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல.

துணைவேந்தா் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சோ்ப்பதற்கான பிரிவை பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே இதற்குத் தீா்வு. அதுவரையிலும் ஆளுநா் தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்க வேண்டும். துணைவேந்தா்கள் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும். அதுவே லட்சக்கணக்கான மாணவா்களின் வேதனையைத் துடைக்கும். தமிழகத்தின் உயா் கல்வியின் ஒட்டுமொத்த நலன் கருதி, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரும் இணைவேந்தா்களான அமைச்சா்களும் தங்களது மோதல் போக்கினைக் கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும் என்று பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!

சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரை விவரம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானி... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்... மேலும் பார்க்க

ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா்.எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்: தொழில் துறை ஆணையா் நிா்மல் ராஜ்

சென்னை: ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம் என தமிழ அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை ஆணையரும் தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல் ராஜ் தெரிவி... மேலும் பார்க்க

சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?

சென்னை: தமிழக சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா? என சிபிசிஐடி அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க