செய்திகள் :

துப்பாக்கிச்சூடு: `ஸ்டாலின் அன்று சொன்னார், ஆனால்..!’ - 7ம் ஆண்டு நினைவு தினத்தில் கலங்கும் மக்கள்

post image

தூத்துக்குடியிலுள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 100வது நாளான கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து குடியேறும் போராட்டத்திற்காக மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கலவரமாக மாறியது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள்

அப்போது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஆலையை மூடியது தமிழக அரசு. ஆனால், தற்போது வரை ஆலையை திறக்க நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது வேதாந்தா.

7-ம் ஆண்டு நினைவு தினம்

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் கல்லறைகளில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டம் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவியும், மெழுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக மாநகரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

7-ம் ஆண்டு நினைவஞ்சலி

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், “முந்தைய சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தூத்துக்குடியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆனால், தி.மு.கவின் ஆட்சி முடிவடைய உள்ள நிலையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் முன்னாள் ஆட்சியர், முன்னாள் எஸ்.பி., முன்னாள் டி.ஜி.பி., போலீஸார், வருவாய்த்துறையினர்களின் பெயர்கள் பதவியைக் குறிப்பிட்டும் ஆதாரப் பூர்வமான அறிக்கை தாக்கல் செய்தும் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

துப்பாக்கிச்சுட்டில் பலியான 15 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அருணா ஜெகதீசன் அறிக்கை முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எங்களின் எந்த கோரிக்கைக்கைக்கும் இந்த அரசு செவிமடுக்க வில்லை. தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என்றனர்.

``25 ஆண்டுகள் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம்..'' - வெள்ளி விழா கேக் வெட்டிய சி.பி.ஐ கட்சி!

புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்கள் மற்றும் முக்கிய திருவிழா நாள்களின் போதும், கோடை விடுமுறையின் போ... மேலும் பார்க்க

TASMAC: `இந்திரா நினைவு குடியிருப்பில் டாஸ்மாக் திறப்பு' - முற்றுகையிட்டு போராடும் மக்கள்

நாகப்பட்டினம் அருகே உள்ளது ஒரத்தூர். இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மதியம் திடீரென புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை கண... மேலும் பார்க்க

”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி- பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஜி.பி.முத்து என்ற பெயரில் யூ-டியூப்பில் இவர் பிரபலம்.இதே பகுதியில் உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்... மேலும் பார்க்க