ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்...
தும்பை பூ ஞாபகம் - கவிதை| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
முன்னொரு நாளில்
வெண்னிற பூக்களுடன்
தும்பைச் செடிகளாகவே நெறஞ்சு
கெடந்தது காடு கரை
களத்து மேடெல்லாம்.
வெள்ள நிறத் தும்பப் பூக்களின்
பரப்பெங்கும் பறக்கும் பூக்களென
பட்டாம் பூச்சிகள் பறந்து
திரிந்தன.
மேல்ச் சட்டைய அவுத்து
பட்டாம் பூச்சிகளின் மேல்
லாகவமாய் போர்த்திப் பிடித்து;
சில நிமிட ரசிப்புக்கு பின்னால
பறக்கவிட்ட நாங்களும்
பட்டாம் பூச்சிகளாய்த் திரிந்தோம்.
காட்டுவெளியில் வெளஞ்ச
தட்ட பயறு காயெல்லாம்
தும்பச் செடியால சுத்தி
தீயில சுட்டுத் திங்கையில
தும்பச் செடி உப்பெறங்கி
அவுச்சது மாதிரி அம்புட்டு
சுவையாயிருக்கும்.
வெள்ள வேட்டி சட்டைய துவைக்கிறப்போ
தும்பப் பூ போல வெளுக்கணும்னு
உவம சொல்லி பேசுவாக
ஊருப் பக்க ஆளுக.
தை பொங்கலுக்கு முன்னால
மாட்டுக் கொட்டடி
வீட்டு வாசல்
வயக்காடு
செவக்காடு
குப்ப மேடு
குலசாமினு அத்தனைக்கும்
#காப்புகட்டு கட்டுறது வழக்கம்.
ஆவாரம்பூவு வேப்பங்கொல
மாவிலை பெரண்டக்கொடி
சிறுபீளை பூவோட கட்டுற
#காப்புகட்டுல
தும்பச் செடியும் பிரதானம்.
கதையெல்லாம் சொல்லிகிட்டே
தும்பைச் செடி காட்ட
களத்து மேடு கூட்டி வந்தேன்
காங்கிரீட் நகரில் வசிக்கும்
என் மகளை.
களத்து மேடெங்கும்
வெள்ள வெளேரென பூத்துக்கிடந்தது
எங்கிருந்தோ இறக்குமதி செய்த
கோதுமையில் கலந்து வந்த
பார்த்தீனியம் ஹிஸ்டோ போரஸ்
●ஒன்னுக்கும் உதவாத
உலகமயம் !
●தவிச்ச வாயிக்கு குடிக்கும் தண்ணியக் கூட காசுக்கு விக்கிற
தனியார்மயம்!
●தட்டுக் கெட்ட
தாராளமயம்!
இப்படியான உலகில்
அடையளத்திற்கு ஏங்கும்
என் மண்ணின் எத்தனையோ விசயங்களை போலவே
ஒரு ஓரத்தில் சிரித்துக்
கொண்டிருந்து அதே
வெண்ணிற பூக்களுடன்
ஒரெயொரு தும்பைச் செடியொன்று.
:- வீ.வைகை சுரேஷ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...