சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
துல்கர் சல்மான் 40 - டைட்டில் வெளியீடு!
நடிகர் துல்கர் சல்மான் புதிய படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் துல்கர் சல்மானின் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் படத்தின் போஸ்டர் வெளியிட்டு, படத்தின் தலைப்பையும் அறிவித்துள்ளனர். ஐ’ம் கேம் (I'm Game) என்ற பெயரில் துல்கரின் புதிய படம் உருவாகவுள்ளது.
கோட் சூட் அணிந்த ஒருவரின் காயமடைந்த கையில் பந்து மட்டும் சீட்டு ஒன்றும் இருப்பதுபோல போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
போஸ்டர் வெளியிட்ட சில நிமிடங்களே ஆன நிலையில், படம் குறித்த ஆவல் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
The Game is On ! #RollYourDice#ImGame@ImGameMovie@nahaskh1@dQsWayfarerFilm#I'mGame #dQ40#DulQuerSalmaan#NahasHidhayath#WayfarerFilmspic.twitter.com/5q3YUQLq0w
— Dulquer Salmaan (@dulQuer) March 1, 2025
துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து 13 வாரங்கள் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரே தென்னிந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.