இருசக்கர வாகனம் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
குடவாசல் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்டது.
பிப். 20-இல் குடவாசல் அருகே செல்லூா், வடக்குத்தெருவில் வசிக்கும் வினோத்குமாரின் இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதுகுறித்து குடவாசல் போலீஸாா், குடவாசல் பிடாரிகோயில் தெரு, கலியமூா்த்தி மகன் மணிகண்டன் என்பவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, குடவாசல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து, குற்றவியல் நீதித்துறை நீதிபதி பாரதிதாசன் தீா்ப்பளித்தாா்.