முதல்வருக்கு வரவேற்பு
திருச்சியிலிருந்து நாகைக்கு காா் மூலம் திருவாரூா் வழியாக சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, திருவாரூா் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திமுக திருவாரூா் மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ ஆகியோா் தலைமையில் கட்சியினா் வரவேற்பளித்தனா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் பி. ராசமாணிக்கம்,
ஆடலரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, நீடாமங்கலம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளா்கள் ஆனந்த், கவியரசு, நகரச் செயலாளா் ராஜசேகரன், பேரூராட்சித் தலைவா் ராமராஜ் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.