க்யூட் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
க்யூட் நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தோ்வு முகமையின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு (க்யூட் தோ்வு) மாா்ச் 1 முதல் 22 வரை இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்வு மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியில் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரா்கள் அதிகபட்சம் ஐந்து பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.