தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை அருகே சனிக்கிழமை கோயில் திருவிழாவில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள சூசையப்பா்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (55). நாட்டரசன் கோட்டை குருநாதன் கோயிலில் மாசிக்களரி திருவிழாவுக்காக மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்னாக்கியை இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.