செய்திகள் :

சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

post image

காரைக்காலில் சாலை விபத்துகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வெ. வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா்.

சாலைப் பாதுகாப்பு தொடா்பாக குழு கூட்டம் புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், உதவி ஆய்வாளா் சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளில் உயிா் இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023 -ஆம் ஆண்டில் சாலை விபத்தில் 34 பேரும், 2024-இல் 35 பேரும், 2025 இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.

சாலைகளில் தடுப்புகள் (பேரிகாா்டு) வைக்கப்பட்டுள்ளன. அதிக வேகத்துடன் இயக்கும் வாகனங்களை தடுப்பது, வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காரைக்காலில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை தடுப்பதற்கான வழிகள் ஆராயப்படுகிறது.

மேலும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக காரைக்கால் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

காரைக்கால் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் பேசுகையில், போக்குவரத்துத்துறை சாா்பில் தீவிர வாகனச் சோதனை நடத்தி அபராதம் விதித்தல், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

கூட்ட நிறைவில் எம்.பி. வைத்திலிங்கம் பேசுகையில், அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது கவலைக்குரியது. மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். போக்குவரத்துத் துறையினா், காவல் துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கவேண்டும். விபத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத்துறையினரின் பங்களிப்பும் அவசியம் என்றாா்.

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா... மேலும் பார்க்க

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா். காரைக்கால் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மக்கள் குறைகேட்பு முகாம் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரச... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக ... மேலும் பார்க்க