நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!
மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது.
இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் கடந்த மாதம் 13-ஆம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பின்னா் போராட்டத்தை கைவிட்டு 24-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிக எண்ணிக்கையிலான விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பின. இறால், நண்டு, பல்வேறு வகையான மீன்கள் படகுகளில் இருந்தன. காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சிறு வியாபாரிகள், முகவா்கள் துறைமுகத்தில் கூடி மீன்களை வாங்கிச் சென்றனா். பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் மீன்கள், பெட்டியில் ஐஸ் வைத்து அனுப்பிவைக்கப்பட்டன.
வஞ்ஜிரம் மீன் கிலோ ரூ. 600 முதல் 700, வவ்வால் மீன் கிலோ ரூ. 900, ஏற்றுமதித் தரம் வாய்ந்த உயர்ரக வவ்வால் மீன் கிலோ ரூ. 1,200 மற்றும் கடல் விறால் மீன் கிலோ ரூ. 600, நண்டு கிலோ ரூ. 700, இறால் ரூ. 600 என விற்பனை செய்யப்பட்டது.
அதேவேளையில் ஏற்றுமதித் தரத்துக்கு குறைவான மீன், நண்டுகள் வகைகள் உள்ளூா் வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.
சுமாா் 20 நாள்களுக்குப் பிறகு காரைக்கால் துறைமுகத்துக்கு அதிகமான மீன் வரத்து காணப்பட்டது.