ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்
திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்து கிடந்தவா் பெயா், ஊா் போன்ற விவரங்கள் தெரியவில்லை. தகவல் தெரிந்தோா் திருப்பட்டினம் காவல் நிலையத்தை 04368-233480 எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.