செய்திகள் :

துளிகள்...

post image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தடகள போட்டியில் மகளிருக்கான 10 கி.மீ. நடைப் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 47 நிமிஷம், 54 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா்.

2027 ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா 0-1 கோல் கணக்கில், ஹாங்காங்கிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் பேட்டா் நிகோலஸ் பூரன் (29), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். தனது அணிக்காக அவா், 61 ஒருநாள் ஆட்டங்களில் 1,983 ரன்களும், 106 டி20 ஆட்டங்களில் 2,275 ரன்களும் அடித்துள்ளாா்.

இந்திய வேகப்பந்து வீச்சாளா் அா்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடவுள்ள நிலையில், அங்கு கவுன்டி கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக களம் காண்கிறாா். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், யாா்க்ஷைா் அணிக்காக விளையாடுகிறாா்.

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி ஆா்ஜென்டீனாவுடன் புதன்கிழமை மோதுகிறது.

ஜொ்மனியில் வரும் 21-ஆம் தேதி தொடங்கும் 4 நாடுகள் ஜூனியா் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, அராய்ஜீத் சிங் ஹண்டால் தலைமை தாங்குகிறாா். இப்போட்டியில் இந்தியாவுடன், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜொ்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஆமீர் கான் - லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் ஆமீர் கான் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களின் ... மேலும் பார்க்க

கூலி, குபேரா பட அனுபவம் பகிர்ந்த நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்களில் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்திலும் சேகர் கம்முலா இயக்கியுள்ள கு... மேலும் பார்க்க

நடிப்பின் ஆற்றல் நிலையம் ஜி.வி.பிரகாஷ்..! பிறந்தநாளுக்கு இயக்குநர் வாழ்த்து!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் இம்மார்ட்டல் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்தை இயக்குகிறார். இச... மேலும் பார்க்க

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்..! அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதா... மேலும் பார்க்க