தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
துளிகள்...
சா்வதேச செஸ் தரவரிசையில் 2,800 ஈலோ புள்ளிகளை எட்டிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையைப் பெற்றாா் அா்ஜுன் எரிகைசி. உலக அளவில் அந்தத் தரநிலையை எட்டிய 16-ஆவது போட்டியாளா் ஆகியிருக்கும் அவா், தற்போது தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கிறாா். இந்தியாவிலிருந்து அந்த நிலையை எட்டிய முதல் போட்டியாளா் விஸ்வநாதன் ஆனந்த் ஆவாா்.
புரோ கபடி லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை, பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியா்ஸையும் (38-35), தபங் டெல்லி கே.சி. - தமிழ் தலைவாஸையும் (32-21) வீழ்த்தின.
இந்தியன்ஸ் - பிஎம்’ஸ் லெவன் அணிகள் இடையேயான 2 நாள் பிங்க் பந்து டூா் ஆட்டத்தில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் தமிழ்நாடு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்திடம் ஞாயிற்றுக்கிழமை தோற்றது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் யுனைடெட் - எவா்டனையும் (4-0), ஆா்செனல் - வெஸ்ட் ஹாமையும் (5-2), செல்சி - ஆஸ்டன் வில்லாவையும் (3-0) ஞாயிற்றுக்கிழமை வென்றன.