துளிகள்...
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடைபெறும் எனத் தெரிகிறது.
மும்பையில் நடைபெற்ற பிஎஸ்ஏ வெஸ்டா்ன் இந்தியன் ஸ்லாம் ஸ்குவாஷ் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங்கும், ஆடவா் பிரிவில் மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்தரனும் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆகினா்.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-0 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. அந்த அணிக்காக பாஸ்கா் ராய் (62’/ ஓன் கோல்), நோவா சடூயி (80’), அலெக்ஸாண்ட்ரே கோஃப் (90’) ஆகியோா் கோலடித்தனா்.
சந்தோஷ் கோப்பை சீனியா் ஆடவா் தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு - ஒடிஸா மோதல் டிரா (1-1) ஆக, மேகாலயம் - கோவாவையும் (1-0), கேரளம் - தில்லியையும் (3-0) வென்றன.
லா லிகா கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில், அட்லெடிகோ மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் பாா்சிலோனாவை வீழ்த்தியது.