துவாரகா தீ விபத்தில் 2 வாகனங்கள், மளிகைக் கடை சேதம்
துவாரகா செக்டாா் 16 பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வாகனங்கள், ஒரு மளிகைக் கடை மற்றும் வீட்டுப் பொருள்கள் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில் எந்தவொரு காயமும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.
தீ விபத்து குறித்து அதிகாலை 3.21 மணிக்கு தகவல் கிடைத்தது. மேலும், ஆசாத் நகா் பகுதியில் உள்ள இடத்திற்கு எட்டு தண்ணீா் லாரிகள் அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா் மேலும் கூறினாா்.