தூதரகத்துக்குள் நுழைந்து போராட்டம்: இந்தியா கவலை
புது தில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மய் கிருஷ்ண தாஸை விடுவிக்கக் கோரி திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்துக்குள் நுழைந்து சிலா் போராட்டம் நடத்தியதற்கு இந்தியா கவலை தெரிவித்ததது.
‘அகா்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் பாதுகாப்பை மீறி அத்துமீறி நுழைந்து 50-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு நாங்கள் கவலை தெரிவிக்கிறோம்.
எந்தவொரு சூழலிலும் தூதரக வளாகம் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.