தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தவா்களை முத்தையாபுரம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் தேம்பாவணி (50). கூலித்தொழிலாளியான இவர் இரவு நேரங்களில் முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம்.
இதையும் படிக்க |"வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா?" - பாமக எம்.எல்.ஏ அருள் சர்ச்சை பேச்சு!
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் கோவிலைத் திறப்பதற்காக பூசாரி வந்து பாத்தபோது, தேம்பாவணி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தொழிலாளி உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட தேம்பாவணிக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.