Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடியில் மீன்களின் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பொங்கல் பண்டிகை முடிந்து தொடா் விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து, ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை காலையில் கரை திரும்பினா். கடல் பகுதியில் காற்று அதிகமாக விசியதால் மீன்கள் அதிகமாக வலையில் சிக்காததால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1,200 வரையும், விளை மீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன்கள் ரூ.600 முதல் ரூ.800 வரையும், நண்டு ரூ. 600 முதல் ரூ.800 வரையும் விற்பனையானது.
மேலும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3,200, ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களான தம்பா, பண்டாரி ஆகியவை கிலோ ரூ.400 என விற்பனையானது. வரத்து குறைந்து காணப்பட்டாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.