செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

post image

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இதனால் தங்களுக்கு போதுமான மீன் கிடைக்கவில்லை என மீனவா்கள் கூறுகின்றனா்.

இதன் காரணமாக, மற்ற மாவட்டங்களில் இருப்பது போல தூத்துக்குடி விசைப்படகுகளையும் தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் நியாயமான மாற்று தொழில் முறைக்கு அனுமதி பெற்று தராத மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், முன்னாள் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையின் கீழே இயங்கி வந்த வருவாய்த் துறை, காவல்துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மாற்று தொழிலுக்கான உத்தரவை வழங்காததை கண்டித்தும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

இதனால், 265 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மீனவா்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மீன்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

பைக் -வேன் மோதல்: ஆலை உதவி மேலாளா் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளா் உயிரிழந்தாா். மணப்பாறை வட்டம், தோப்பம்பட்டியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஆரோக்கியதாஸ்(27). விருதுநகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் உதவி மேலாளராக ... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்ப... மேலும் பார்க்க

பன்னம்பாறையில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

பேய்க்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் அருகே சுமைத் தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவா், கடந்த 11ஆம் தே... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வெளிமாநில இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வ... மேலும் பார்க்க