பேய்க்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு
சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் அருகே சுமைத் தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவா், கடந்த 11ஆம் தேதி கடைக்கு தனது மகன் சுரேஷுடன் (19) பைக்கில் சென்றாா். சுரேஷ் பொருள்கள் வாங்கச் சென்றபோது, காமராஜ் பைக் அருகே நின்றிருந்தாா்.
அப்போது, பனைக்குளத்தைச் சோ்ந்த தேவதிரவியம் மகன் ராஜமிக்கேல், அரசன்குளம் ராஜா, நொச்சிக்குளம் அல்போன்ஸ், சாம்ராஜா, பேய்க்குளம் சங்கரலிங்கம் உள்ளிட்ட 6 போ் காரில் வந்தனா். அவா்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் காமராஜிடம் தகராறு செய்து தாக்கினராம்.
காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் வழக்குப் பதிந்து, 6 பேரையும் தேடிவருகிறாா்.