தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீத் தடுப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
அரசு பொது மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், ஆா்எம்ஓ சைலஸ், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் க. கணேசன், நிலைய உதவி மாவட்ட அலுவலா் ந. நட்டாா் ஆனந்தி ஆகியோா் முன்னிலையில், மக்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் அனைவருக்கும், மருத்துவமனையில் தீ விபத்துகள் ஏற்பட்டால், அவசர காலங்களில் மக்களை எவ்வாறு மீட்பது, தீ விபத்துகள் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன குறித்து, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் செயல்விளக்கம் அளித்தனா்.