செய்திகள் :

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அதில், உயிரிழந்த நபர்  விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி  என்பது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமலும் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் இந்த வழக்கு, கடந்த 7 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் இருந்து வந்தது. 

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கடந்த  பிப்ரவரி மாதத்தில் விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினரின் தீவிர விசாரணையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

மாவட்ட எஸ்.பி- ஆல்பர்ட் ஜான்

இவ்வழக்கில் கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி, ராஜராஜன்  மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முந்தைய சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், சந்தேகப்படும் நபர்களின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் ஆகியவை மீண்டும் ஆராயப்பட்டது.

மேலும் இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தை விட்டு சென்றவர்கள் யார் யார் என தனித்தனியாக கண்டறியப்பட்டனர்.  தீவிர விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலகம்

அதில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி, ராஜராஜன்  மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்  ஆகியோர்தான் குற்றவாளிகள்  என்பதை கண்டறிந்து  அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பொன்னுச்சாமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். ஒன்றாக வேலை செய்து வந்த அவர்கள், 7 ஆண்டுகளுக்கு முன் மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி கொலை செய்துள்ளனர்.” என்றனர்.

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போல... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல்போன 107 கிராம் தங்கம் - கண்டுபிடித்தது எப்படி?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட பழமையான பொக்கிஷங்கள் உள்ளன. எனவே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மளிகைக் கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்க... மேலும் பார்க்க

சென்னை: தாயின் செயினைப் பறித்த மகன்; சிசிடிவியால் வெளிவந்த உண்மை; என்ன நடந்தது?

சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய் கைது; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி. பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற... மேலும் பார்க்க