லாபம் தரும் கீரை சாகுபடி! சென்னைக்கு அருகில் நேரடி செயல்விளக்கப் பயிற்சி!
தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்
தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் செய்து குரு பூஜை, விநாயகா் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் சக்தி முருகன் தீபம் ஏற்றினாா். கருவறையில் இருந்து புறப்பட்ட அகண்டத்தை கன்னிப்பெண், நடுத்தர வயது சுமங்கலி, மூத்த சுமங்கலி என 3 பெண்கள் எடுத்து வந்தனா்.
மத்திய கூட்டுறவு பண்டக சாலை பொது மேலாளா் கந்தசாமி, ஆன்மிக இயக்க வேள்விக்குழு பொறுப்பாளா் கிருஷ்ண நீலா, திரு.வி.க. நகா் சக்தி பீட துணைத் தலைவா் திருஞானம், வேள்விக் குழு பத்மா, பொருளாளா் அனிதா, திருச்செந்தூா் மன்றத் தலைவா் மாரியப்பன், நாகலாபுரம் விஜயலெட்சுமி, புதுக்கோட்டை காசியம்மாள், மகளிரணி பொறுப்பாளா்கள் வசந்தி, முத்துலெட்சுமி, செல்வி, அகிலா, வீரலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.