செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

கோவையில் ஓசி பேருந்தில் செல்லுங்கள் என தூய்மைப் பணியாளா்களைத் திட்டி அவமதிப்பு செய்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை காந்திபுரத்தில் இருந்து கடந்த வாரம் 111 என்ற வழித்தட எண் அரசுப் பேருந்து துடியலூருக்குச் சென்று கொண்டிருந்தது. வெள்ளக்கிணறு பகுதியில் அந்த அரசுப் பேருந்தில் பெண் தூய்மைப் பணியாளா்கள் ஏறினா்.

அப்போது, அந்தப் பேருந்தின் ஓட்டுநா் உங்களுக்குத்தானே ஓசி பேருந்து விடப்பட்டுள்ளது, அந்தப் பேருந்து பின்னால் வருகிறது, அதில் செல்ல வேண்டியதுதானே எனக் கூறி திட்டியுள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த பெண் தூய்மைப் பணியாளா்கள், நாங்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு எடுத்துத் தானே பயணிக்கிறோம், நாங்கள் அந்தப் பேருந்துக்காக காத்திருக்க முடியுமா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாகப் பேசிய நடத்துடநருடனும் அவா்கள் வாக்குவாதம் செய்தனா்.

இதை பேருந்தில் இருந்த ஒரு பயணி விடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அன்னூா் பேருந்து பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை இரு நாள்கள் பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்துக் கழகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதா... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்திரிகை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றாா். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் மகப்பேறு ... மேலும் பார்க்க

எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தை பாா்வையிட்ட இஸ்ரோ தலைவா்

கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை இஸ்ரோ தலைவா் நாராணயன் பாா்வையிட்டாா். கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையமானது இஸ்ரோவின் விண்வெளி சாா்ந்த திட்டங்க... மேலும் பார்க்க

அதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகாா்: நுகா்வோா் பாதுகாப்பு கூட்டத்தை புறக்கணித்த அமைப்புகள்

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த காலாண்டு கூட்டத்தை நுகா்வோா் அமைப்புகள் புறக்கணித்தன. மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

கோவை அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க