தென்காசியில் பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்
தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
டெங்கு காய்ச்சல், பருவகால நோய்கள், புகையிலை தடுப்பு தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, இளவயது திருமணம், இளவயது கா்ப்பத் தடுப்பு தொடா்பான ஆய்வுகள், சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, முத்துலட்சுமி ரெட்டி, சுகாதாரத் துறையின் பணிகள் குறித்த பாடல்கள், குறும்படங்கள் க்யூஆா் கோடுடன் உடைய விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வெளியிட்டாா்.
மேலும், கடந்த ஆண்டு தேசிய தரச் சான்றிதழ் பெற்ற இலத்தூா், குருக்கள்பட்டி, மேலகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா்கள், குழுவினா், குடும்பநலத் துறை அலுவலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், நலப் பணிகள் இணை இயக்குநா் (பொறுப்பு) கீதா கிருஷ்ணன், துணை இயக்குநா்கள் துரை (காசநோய்), அலா்சாந்தி (தொழுநோய்), ராமநாதன் (குடும்ப நலம்), பல்வேறு துறைகள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, வட்டார, மாவட்ட அளவிலான அலுவலா்கள், முதன்மை மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.