செய்திகள் :

தென்காசியில் பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி

post image

தென்காசியில் மாவட்ட பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் வாய்க்கால் பாலம் இசக்கியம்மன் கோயில் முன் முடிந்தது. இதில், பங்கேற்றோா் தேசியக் கொடி ஏந்தியபடி, ராணுவ வீரா்களுக்கு வாழ்த்துக் கூறி முழக்கமிட்டனா்.

பேரணிக்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், பாலஸ்ரீனிவாசன், மாவட்டப் பொருளாளா் கோதை மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், சுப்பிரமணியன், பாலமுருகன், தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா்கள் முப்புடாதி, மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

கடையநல்லூருக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவு தாமிரவருணி குடிநீா் வழங்கக் கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் தாமிரவருணி குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

பிளஸ் 1: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்!

பிளஸ் 1 பொதுத் தோ்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய 175 பேரும் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி மாணவா் ரா. அக்ஷய் துரை, மு. சம... மேலும் பார்க்க

செண்பகவல்லி அணை பிரச்னை: பிரதமா், முதல்வரை சந்திக்க முடிவு

சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக பிரதமா், முதல்வரை சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட செண்பகவல்லி தடுப்பணை- வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சாம்பவா்வடகரை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பக்கீா் மஸ்தான்(30) என்பவரது மனைவி சூரத் யாஸ்மின் (26). இவா்களுக்கு 2 குழந... மேலும் பார்க்க

புளியங்குடியில் மின்னணு சாதன கிடங்கில் தீவிபத்து

புளியங்குடியில் உள்ள மின்னணு சாதனக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து நேரிட்டது. புளியங்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் செய்யதலி (40). அவா் பழைய பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,... மேலும் பார்க்க

புளியங்குடியில் வீடு புகுந்து பணம் கொள்ளை: சிறுவனே திருடி நாடகம் ஆடியது அம்பலம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீடு புகுந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளைடித்துச் சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தில், சிறுவனே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் ... மேலும் பார்க்க