செய்திகள் :

தென்காசி: அதீத துர்நாற்ற்றம்... புதர் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்! - போலீஸ் விசாரணை

post image

தென்காசி மாவட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " தென்காசியை அடுத்த இலத்தூரில் மதினாப்பேரி குளம் உள்ளது. இந்த பகுதி அருகே மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக இலத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விரைந்து வந்த இலத்தூர் போலீஸார், சம்பவ இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் பெண் என தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

எரித்துக் கொலை
சம்பவ இடம்

உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை எரித்துக் கொலை செய்தது யார்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என எந்த தகவலும் உடனடியாக தெரியவராததால் இறந்த பெண்ணை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது‌. இந்தச் சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவ... மேலும் பார்க்க

மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில... மேலும் பார்க்க

விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க

சென்னை: கொலையில் முடிந்த தாய் - மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.... மேலும் பார்க்க

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்க... மேலும் பார்க்க