மலப்புரம் திருவிழாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் பலி!
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்தாா். நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜா்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விபத்துகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்து அறிவுரைகளை வழங்கினாா்.
நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்ககுரைஞா்கள், சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
இக் கூட்டத்தில் அரசு வழக்குரைஞா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.