செய்திகள் :

தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி

post image

தென்காசி நகராட்சிக்கு சொந்தமான மலையான் தெருவில், ஆறாவது வார்டில் உள்ள சமுதாய நலக்கூடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்காக சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

அதனை மீண்டும் அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடமாக மாற்ற வேண்டும் எனக் கோரி, தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு தென்காசி மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் முத்துக்குமார் பாய் விரித்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாஜக நிர்வாகி உடன் பேச்சுவார்த்தை

நகர்மன்ற தலைவர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நிலையில் போராட்டத்தை அவர் கைவிட்டார்.

திடீரென நகராட்சி அலுவலக வாசலில் பா.ஜ.க. நிர்வாகி பாய் விரித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்களுடன் வந்த மக்கள்

மைக் செட் கட்டுவதில் பிரச்னைதிண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது... மேலும் பார்க்க

மராத்தா போராட்டதால் ஸ்தம்பித்த மும்பை; சாலை ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய ஜராங்கேவிற்கு கோர்ட் உத்தரவு!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேருடன் மும்பைக்கு வந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற போர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னரும் ஆய்வுகள் தொடக்கம்; விவசாயிகள் முற்றுகையால் பதற்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ 675 கோடி செலவில் காவனூர் காமன்கோட்டை சிறுவயல், ஏ.மணக்குடி, கீழச்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்கப்படும் என மத்திய அரசு ... மேலும் பார்க்க

அபராதம் செலுத்த தவறினால் மொட்டை; இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாக் நீரிணைப்பில் உள்ள பாரம்பர்ய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்து வருகிறது.மேலும் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் ... மேலும் பார்க்க