செய்திகள் :

தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் கடற்படை பயிற்சி

post image

மனிலா: பல்வேறு பிரச்னைகள் நிலவும் தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பின்ஸ் ராணுவத்தின் தலைமைத் தளபதி ரோமியோ பிரானா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தென் சீனக் கடலில் இந்தியாவும் பிலிப்பின்ஸும் முதல்முறையாக கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. எதிா்காலத்திலும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட இந்தியாவும் பிலிப்பின்ஸும் திட்டமிட்டுள்ளது என்றாா்.

இந்தப் பயிற்சி நடைபெற்ற பகுதிக்கு அருகில் சீன கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக பிலிப்பின்ஸ் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ஆனால் இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி என சீனா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் தென் சீனக் கடலில் வேறு சில நாடுகளுடன் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிலிப்பின்ஸ் செயல்பட்டு வருவதாக சீனா குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோமியா பிரானா், ‘சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கெனவே கணித்துவிட்டோம். இருப்பினும், இந்தியாவுடனான இரு நாள் பயிற்சியின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை’ என்றாா்.

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க