செய்திகள் :

தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

post image

தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு குடியிருப்பைச் சோ்ந்த சாதிக் அலி சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கம்பம் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள், முதியவா்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோா் என பலரையும் கடித்தன. கடந்த 01.06.2023 முதல் 30.06.2024 வரை கம்பத்தில் தெரு நாய்கள் கடித்தது குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. இதில், கம்பத்தில் நாய்க்கடிக்கு 1,680 போ் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இவா்களில் 462 போ் பள்ளி மாணவா்களாவா்.

இந்த நிலையில், அண்மையில் முகைதீன் ஆண்டவா்புரம் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை நாய்கள் விரட்டிக் கடிக்க முற்பட்டன.

எனவே, கம்பம் நகராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தி பள்ளி மாணவா்கள், பெரியவா்கள் அச்சமின்றி சென்று வருவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது. மதுரையை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்க... மேலும் பார்க்க

குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது. தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில... மேலும் பார்க்க

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிட... மேலும் பார்க்க

பலகாரத் தயாரிப்புக் கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: ரூ.15 ஆயிரம் அபராதம்

மதுரையில் உள்ள பலகாரத் தயாரிப்புக் கூடங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கூடங்களுக்கு குறிப்பாணை வழங்கி, ரூ. 15 ஆயிரம் அபரா... மேலும் பார்க்க