செய்திகள் :

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!

post image

தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

இதையும் படிக்க : தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தெலுங்கு கற்க வேண்டும் எனவும், வெளி மாநில மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடி... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்ட... மேலும் பார்க்க

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகே... மேலும் பார்க்க

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து... மேலும் பார்க்க

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க