தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!
ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்ட மேலவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சைபராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் உள்ள கொல்லூர் மற்றும் ஆர்.சி.புரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில் உள்ள பார்கள் உள்பட உணவகங்களுடன் இணைக்கப்பட்ட ஒயின், கள்ளுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!