Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு ...
தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: சேலம் அணி முதலிடம்
இளம்பிள்ளையை அடுத்த சித்தா் கோயில் பகுதியில் தேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-2025 மாநிலங்களுக்கு இடையிலான மூன்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் சேலம் அணி முதலிடத்தை பிடித்தது.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் சேலம் அணி முதலிடத்தையும், விருத்தாசலம் இரண்டாம் இடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிபதி சுரேஷ்குமாா் கோப்பை , பதக்கம், சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேஷன் மாநிலப் பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை இளம்பிள்ளை கிங்ஸ் தேக்வாண்டோ கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா்.