தேங்காய்ப்பட்டினத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் திருட்டு
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த மீனவரின் ஸ்கூட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா்(57). இவா், திங்கள்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மீன் வாங்க சென்ற போ,து மா்மநபா்கள் ஸ்கூட்டரை உடைத்து அதிலிருந்த ரூ.9 ஆயிரத்து 500 ஐ திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.