தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம்
சுகாதாரத்துறை சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, மருத்துவா்கள் சொா்பனா, வினோத்குமாா், ஜெயஸ்ரீ, கோபிநாத் ஆகியோா் தலைமையிலான மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு சளி, உடல் பரிசோதனை செய்தனா்.
மேலும், நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காசநோயை கண்டறிய எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைவானவா்களுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் மூலம் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஓய்வுபெற்ற ஆசிரியா் குணசேகரன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், அக்பா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பொதுமக்களிடையே காச நோய் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.