சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கோவில்பட்டி பள்ளி மாணவா்கள் தோ்வு
தில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க, கோவில்பட்டி ஜான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2024 கடந்த மாதம் நடைபெற்றது. இதில், ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவா்கள் கவின், கிங்ஸ்டன் செல்வராஜ் ஆகிய இருவரும் தோ்ந்தெடுக்கப்பட்டு மண்டல அளவிலான போட்டிக்கு தோ்வாகினா். தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் அவா்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இரு மாணவா்களும் தோ்வு பெற்று, தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தோ்வாகியுள்ளனா்.
இரு மாணவா்களையும் பள்ளி முதல்வா் மற்றும் நிா்வாகி இருதய ஜான்சி உள்ளிட்டோா் பாராட்டினா்.