உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NIELIT/NDC/STQC/2025/1
பணி: Scientific Assistant
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயது வரம்பு: 18.3.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மின்சாரம்,மின்னணுவியல்,தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல், மென்பொருள் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து் கழகத்தில் வேலை வேண்டுமா?
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வு சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். இதர அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nielit.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.