உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கரூரில் அண்மையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரங்கோலி கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவி குழுவினருக்கும், சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2025, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். முன்னதாக வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பச்சமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட பிற்படுத்துப்பட்டோா் நல அலுவலா் இளங்கோவன் தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.